-->
அஸ்ஸலாமு அழைக்கும்! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!💝💟🌠🌙🌃🌈.... ஒவ்வொரு முஸ்லிம் ஆண் மற்றும் பெண் இருபாலாருக்கும் மார்க்க கல்வி அவசியம். அழகான முறையில் அறிந்து கொள்ள ! மற்றவர்களுக்கும் இதை தெரியப்படுத்தவும்!🌟🌍....

சனி, 13 ஏப்ரல், 2024

My blog list ✨️ 📚

சனி, 4 ஏப்ரல், 2020

ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!

ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன்  2:183)

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன்  2:185)

ஞாயிறு, 1 மார்ச், 2020

சனி, 26 நவம்பர், 2016

தீய நண்பன் அமைந்தால்...

தீய நண்பன் அமைந்தால்...
நல்ல நண்பனைத் தேர்வு செய்யாமல் தீய நண்பனை நாம் தேர்வு செய்துவிட்டால் நம்முடைய நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.
தீயதை ஏவுதல், பகைமையை ஊட்டுதல், ஒழுக்கங்கெட்ட செயல்பாடுகளுக்கு அழைத்துச்செல்லுதல் இன்னும் மார்க்கத்திற்கு முரணான பிற விஷயங்களில் கொண்டு சென்று அழிவின் விளிம்புக்கே கொண்டு சென்றுவிடுவான்.
அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவ னிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்! 
(நூல் : புகாரி 2101)

வெள்ளி, 25 நவம்பர், 2016

ரியா என்னும் சிறிய இணைவைப்பு 😈😱[எச்சரிக்கை]

ரியா என்னும் சிறிய இணைவைப்பு 😈😱[எச்சரிக்கை]
ஒரு மனிதன் செய்கின்ற எந்த நல்ல அமல்களாக இருந்தாலும் இறைவனுக்காக செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமலும் இதற்காக மறுமையில் நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் இல்லாமலும் பிறருடைய பாராட்டுதலையும் புகழையும் எதிர்பார்த்து செய்கின்ற செயலுக்கு தான் அரபியில் ரியா என்று சொல்லப்படுகிறது.
ரியா என்ற பாரதுôரமான பாவத்தின் விபரீதத்தைப்பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ளாததின் காரணத்தால் இந்த எண்ணம் நம்மில் பலரிடத்தில் இருப்பதை காணலாம். எனவே இந்த பாவத்தின் வீபரீதத்தைப்பற்றி நாம் முழமையாக அறிந்துக் கொள்வோம்.

ரியா ஏற்படுவதற்கு காரணம்:
ஒருவன் தன்னுடைய தொழுகை, நோன்பு, தர்மங்கள் ஆகிய நல்ல அமல்களை மக்களுக்கு காட்டுவதற்காக செய்து அதன் மூலம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் முக்கிய காரணியாக திகழ்கிறது. இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் ஒரு உதாரணத்தை சொல்லி நம்மை எச்சரிக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 2:264)