நிறைய வேண்டாம்! பரக்கத் போதும்!🍹

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! நிறைய வேண்டாம்! பரக்கத் போதும்!🍹
கோடான கோடி செல்வம் இருந்தாலும், இறைவன் அதில் பரக்கத்தை நீக்கி விட்டால் அந்த செல்வத்தைக் கொண்டு எதனையும் சாதிக்க இயலாது. மிகக் குறைவான் செல்வம் இருந்தாலும் அதில் இறைவனது பரக்கத் இருந்தால் அது கோடி ரூபாய் செய்யும் வேலையை சுலபமாக செய்துவிடும். இதுவே மறைமுகமான அபிவிருத்தியாகும். இந்த மறைமுகமான அபிவிருத்தியாக இருக்கிற பரக்கத்தைப் பற்றியும், அதனை பெறுவதைப் பற்றியும் இந்த  சிறிய உரையிலே நாம் பார்க்க இருக்கிறோம்.
விரலை சூப்புதல்
முஸ்லிம்களில் சிலர் நவீன கலாச்சாரம் என்றபெயரில் ஹோட்டல்களில் சாப்பிடும்போது கைவிரல்களை சூப்பி சாப்பிடுவதில்லை. காரணம் பிறமதத்த வர்கள் அங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று ஒன்றுக்கும் ஒவ்வாத காரணத்தை சொல்லி இந்த சுன்னத்தை விட்டுவிடு கிறார்கள்.

கலாச்சாரத்தையும், அழகான ஒழுக்கங்களையும் கற்றுத்தந்த மார்க்கம் இந்த இஸ்லாம். இந்த மார்க்கம் கற்றுத்தந்த இந்த மார்க்கத்தில் அழகான நடைமுறைகளை விடுகிறார்கள். இவர்கள் எப்படி பரகத்தை பெருவார்கள்.?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உணவு உண்டால், அவர் தம் விரல்களை உறிஞ்சிக்கொள்ளட்டும். அவற்றில் எதில் வளம் (பரக் கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் (4140)

உறவைப்பேணுதல்
இது அல்லாமல் நாம் பெற்ற செல்வங்களின் மூலம் நமது உறவினர்க ளையும் கவனிக்க வேண்டும். உறவினர்களை கவனிக்கும்போது நமது பொருளில் அருள்வளம் கிடைக்கும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் செல்வவளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ் நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்க ளுடன் சேர்ந்து வாழட்டும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.
நூல்: புகாரி (2067)


சத்தியம் செய்து விற்பது கூடாது
இன்று பெரும்பாலும் வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விற் பனை செய்வதற்கும். அதிக லாபம் பெறுவதற்கும் சத்தியம் செய்து விற் பனை செய்கிறார்கள். இதை முஸ்லிம்கள்கூட செய்து தங்களுடைய பொருள் களில் வரும் அருள்வளம் இழந்து விடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  சத்தியம் செய்வது சரக்கை (சுலபமாக) விற்பனை செய்ய உதவும்: ஆனால், பரக்கத் (எனும் அருள் வளத்)தை அழித்துவிடும்!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி (2087)


கருத்துகள்