கொள்கையில் தடுக்கப்பட்டவை

 


கொள்கையில் தடுக்கப்பட்டவை

(தாருல் ஹுதா, சென்னை - 1  muftiomar@gmail.com) 


தாயத்துகள் அணிவது, கண் திருஷ்டிகளை தடுக்க வேண்டுமென்பதற்காக கயிறுகள் அணிவது.


சூனியத்தின் அனைத்து வகைகளும்.


நட்சத்திரங்களையோ அல்லது மற்ற கோள்களையோ கொண்டு நன்மை அல்லது தீமை நடக்கும் என்று கூறுவது மற்றும் நம்புவது.


அல்லாஹ்வுடைய (தாத்) உள்ளமையைப் பற்றி சிந்திப்பது. (அவனுடைய படைப்புகளைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும்.)


அல்லாஹ்வின் மீது கொள்ளாமல் மரணிப்பது. நல்லெண்ணம்


இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுபவரை நரகவாசி என்று கூறுவது.


மார்க்க ஆதாரமில்லாமல் ஒருவரை காஃபிர் என்று கூறுவது.


உலக காரியங்களில் ஒன்றை பிறரிடத்தில் கேட்கும்போது அல்லாஹ்வின் திருமுகத்திற் காக கொடுங்கள் என்று கேட்பது.


அல்லாஹ்வுக்காக கொடுங்கள் என்று கேட்ப வருக்கு கொடுக்காமலிருப்பது. (ஆனால் அவர் கேட்கும் விஷயம் பாவமான காரியமாக இருக்கக்கூடாது)


காலத்தை ஏசுவது.


சகுனம் பார்ப்பது.


இணைவைப்பவர்கள், சேர்ந்து தங்குவது. காஃபிர்களுடன்


அல்லாஹ்வுடைய எதிரிகளாகிய யூதர்கள், கிருஸ்தவர்கள், இணைவைப்பவர்கள், காஃபிர்கள் ஆகியவர்களுடன் ஆழமான நட்புக் கொள்வது.


அமல்களை வீணாக்குவது. உதாரணமாக பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காகவோ, பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவோ ஒரு அமலை செய்வது அல்லது தனது அமல்களை சொல்லிக் காட்டுவது.


கஅபத்துல்லாஹ், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜித் அக்ஸா ஆகிய மூன்று இடங்களைத் தவிர மற்ற இடங்களை புனிதமாகக் கருதி அவற்றை தரிசிக்கச் செல்வது.


கப்ருகளுக்கு மேல் அல்லது அவற்றை சுற்றி கட்டிடம் அமைப்பது.


கப்ருகளில் விளக்கெரிப்பது.


நபித்தோழர்களை ஏசுவது, அவர்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சனைகளைப் பற்றி


தவறான கண்ணோட்டத்தில் ஆராய்வது.


‘தக்தீர்' எனும் விதியைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது.


மார்க்க ஞானமின்றி திருகுர்ஆனில் தர்க்கம் செய்வது, விவாதம் செய்வது.


திருகுர்ஆன் விஷயத்தில் சர்ச்சை செய்பவர் களுடனோ அல்லது அதை செய்பவர்களுடனோ அமர்வது. பரிகாசம்


‘தக்தீர்' எனும் விதியை மறுப்பவர்கள், இன்னும் இதுபோன்று கொள்கை ரீதியான பித்அத்கள் (அனாச்சாரங்கள்) செய்பவர்களை நோய் விசாரிக்கச் செல்வது அல்லது அவர்களது ஜனாஸாவில் கலந்து கொள்வது அல்லது அவர்களுக்காகக் கவலைப்படுவது.


காஃபிர்களோ அல்லது பித்அத்தை சார்ந்தவர் களோ எழுதிய மதரீதியான புத்தகங்களைப் படிப்பது.


காஃபிர்கள் வணங்கும் பொய்யான கடவுள் களை திட்டுவது. (அதாவது, அதனால் அவர்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள் என்று இருந்தால்).


அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை, வசனங் களை பரிகாசம் செய்வது.


அல்லாஹ் தடுத்தவற்றை ஆகும12427 கொள்வது அல்லது அனுமதித்தவற்றைத் தடை செய்து கொள்வது.


அல்லாஹ்வை தவிர பிறருக்கு சிரம் பணிவது அல்லது குனிவது.


நிஃபாக் எனும் நயவஞ்சகத்தன்மை உள்ளவர் களுடனும், பெரும் பாவங்களை வெளிப் படையாக செய்பவர்களுடனும் உட்கார்ந்து பேசி மகிழ்வது. கூடி


மார்க்கத்தில் பிரிவினை உண்டு பண்ணுவது, சத்தியத்தில் உள்ள ஜமாஅத்தை விட்டுப் பிரிவது.


யூதர்கள், கிருஸ்தவர்கள், முஷ்ரிக்குகள், மஜூஸிகள் (நெருப்பை வணங்குபவர்கள்) காஃபிர்கள் ஆகியோர்களின் மதச் சடங்குகள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவது.


காஃபிர்களுக்கு நாம் முதலில் ஸலாம் சொல்வது.


வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களின் நூல்களிலிருந்து சொல்லும் விஷயங்களை உண்மை அல்லது பொய் என்று சொல்வது. (ஆனால் அதற்கு உண்மை அல்லது பொய் என்பதற்கு நமது ஷரீயத்தில் ஆதாரம் இருந்தாலே தவிர).


பெற்றோர், பிள்ளைகள், சிலைகள், மீது சத்தியம் செய்வது.


அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் என்று சொல்வது.


அல்லாஹ்வைத் தவிர மற்றவரை இறைவன், கடவுள், ஆண்டவர் என்று சொல்வது.


நேரம் சரியில்லை என்று சொல்வது.


உன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்! நீ நரகவாதி! என ஒருவருக்கொருவர் சபித்துக் கொள்வது.

கருத்துகள்