தொழுகையில் தடுக்கப்பட்டவை

 


சுத்ததில் தடுக்கப்பட்டவை


தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது மற்றும் தெருக்களிலோ அல்லது தெருக்களின் ஓரங்களிலோ மலம், ஜலம் கழிப்பது.


மக்கள் பயன்படுத்தும் நிழலிலும், குடிநீருக்கு பயன்படுத்தும் குளங்களுக்கு அருகிலும் மலம், ஜலம் கழிப்பது.


மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்வது அல்லது கிப்லாவை பின்னோக்கி அமர்வது. (சில அறிஞர்கள் கட்டிடங்களுக்குள் இருந்தால் குற்றமில்லை என்கின்றனர்.)


வலது கையைக் கொண்டு மர்மஸ்தானத்தை சுத்தம் செய்வது அல்லது வலது கையால் (மர்மஸ்தானத்தை) துடைப்பது.


தூங்கி எழுந்தவுடன் கைகளைக் கழுவாமல் தண்ணீர் உள்ள பாத்திரங்களில் கைகளை நுழைப்பது.


மலம், ஜலம் கழிப்பவருக்கு ஸலாம் சொல்வது.


உறுப்பை வலது கையால் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது.



தொழுகையில் தடுக்கப்பட்டவை


» சூரியன் உதிக்கும் நேரத்திலோ அல்லது மறையும் நேரத்திலோ அல்லது நடு உச்சி நேரத்திலோ (நஃபில்) தொழுவது.


(சுபுஹு) தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகும் வரையிலும் அஸர் தொழுகைக் குப் பின் அது மறையும் வரையிலும் (நஃபில்) தொழுவது. (ஆனால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை, இன்னும் இது போன்ற காரணங்களுடன் நிறைவேற்றப்படும் தொழுகைகளைத் தொழலாம்.)


வீடுகளில் நஃபில் தொழுகைகளை தொழாமல் அடக்கஸ்தலங்களைப் போன்று அவற்றை ஆக்குவது.


ஃபர்ளு தொழுகையை தொழுத பின்பு இடை வெளி இல்லாமல் நஃபிலான தொழுகையை சேர்த்துத் தொழுவது. (ஃபர்ளு தொழுகைக் குப் பின்பு சிறிது நேரம் திக்ரு செய்வது அல்லது துஆ செய்வது அல்லது இடம் மாறி தொழுதுகொள்ள வேண்டும்.)


ஃபஜ்ருடைய நேரம் ஆரம்பித்தபின் அதனுடைய சுன்னத்தான தொழுகையைத் தவிர மற்ற நஃபிலான ஈடுபடுவது. தொழுகையில்


தொழுகையில் இமாமுக்கு முந்தி செயல் களைச் செய்வது.


ஜமாஅத் தொழுகையில் வரிசையை விட்டு தனியாக நின்று தொழுவது.


தொழுகையில் முகத்தை அங்கும் இங்கும் திருப்புவது அல்லது வானத்தின் பக்கம் உயர்த்திப் பார்ப்பது.


ருகூஃ, சுஜுதுகளில் குர்ஆன் ஓதுவது. (சுஜுதுகளில் குர்ஆனில் உள்ள துஆ உடைய ஆயத்துகளை துஆவிற்காக ஓதலாம்.)


உணவு தயாராகி, மனம் உணவில் நாட்டம் கொண்ட பின்பு தொழுகையை ஆரம்பிப்பது.


சிறுநீரையோ, மலத்தையோ, காற்றையோ அடக்கிக் கொண்டு தொழுவது.


►அடக்கஸ்தலங்களிலும், குளியல் அறைகளி லும் தொழுவது.


காக்கை கொத்துவது போன்று அவசர அவசரமாகத் தொழுவது.


நரி பார்ப்பது போன்று தொழுகையில் அங்குமிங்கும் பார்ப்பது.


மிருகங்கள் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்காருவது போன்று தொழுகை யில் உட்காருவது.


முன்னங்கால்களை தரையில் ஊன்றிக் கொண்டு நாய் உட்காருவது போன்று தொழுகையில் இரு கைகளையும் தரையில் ஊன்றி உட்காருவது.


ஒட்டகங்களைப் போன்று தனக்கென்று பள்ளியில் ஓர் இடத்தை குறிப் 19/127 கொள்வது.


தொழுகையில் பூமியை துடைப்பது. (தேவை ஏற்பட்டால் கஜுதுடைய இடத்தில் கல் போன்றதை அகற்ற ஒரே ஒரு முறை மட்டும் அனுமதி உண்டு.)


துணி போன்றவற்றால் வாயை மறைப்பது.


அருகில் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.


தூக்கம் மிகைக்கும் போது இரவு வணக்கங் களைத் தொடர்வது. (தூக்கம் மிகைத்தால் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்த பின்புதான் வணக்கத்தில் ஈடுபட வேண்டும்.)


மார்க்கத்தில் குறிப்பிட்ட இரவுகளைத் தவிர ஏனைய இரவுகளில் முழு இரவு விழித்திருந்து வணங்குவது. (குறிப்பாக, தொடர்ந்து இவ்வாறு செய்வது அறவே கூடாது.)


தொழுகையில் கொட்டாவி விடுவது, ஊதுவது.


வரிசையில் அமர்ந்திருக்கும் பிடரிகளை தாண்டிச் செல்வது. மக்களின்


தொழுகையில் ஆடையை இறுக்கிக் கொண்டு தொழுவது.


» சரியாக தொழுத தொழுகையை திரும்ப மீண்டும் தொழுவது.


தொழும்போது காற்று பிரிந்துவிட்டது என்று உறுதியில்லாமல், சந்தேகத்தினால் மட்டும் தொழுகையை விட்டு வெளியேறுவது.


ஜுமுஆ குத்பாவின்போது பேசுவது. விளையாடுவது.


ஜுமுஆ குத்பாவின்போது இரு கால் களையும் உயர்த்தி, தொடையை வயிற்றுடன் சேர்த்து கால்களைத் துணியைக் கொண்டோ, கையைக் கொண்டோ கட்டி உட்காரும்போது தூக்கம் வந்துவிடும் அல்லது அவ்ரத்(மறைக்க வேண்டிய பகுதி) வெளிப்பட்டு விடும் அல்லது காற்று வெளியேறிவிடும் என்று இருப்பின் அப்படி உட்காருவது.


இகாமத் சொல்லப்பட்டபின் ஜமாஅத் தொழுகையில் சேராமல் வேறு தொழுகையில் ஈடுபடுவது.


தேவையில்லாமல் இமாம் உயர்ந்த இடத்தில் நின்று தொழவைப்பது.


தொழுபவருக்கு முன் குறுக்கே செல்வது.


தொழுபவர் தனக்குமுன் வைக்கப்பட்ட சுத்ராவிற்கு (-தடுப்புக்கு) இடையில் யாரும் செல்லும்போது அவரை தடுக்காமல் விடுவது.


தொழுபவர் தனது காலணியை வலப்பக்கம் வைப்பது; அதுபோன்று இடப் பக்கம் யாரும் தொழுவார்கள் என்று இருப்பின் இடப்பக்கம் வைப்பது. (இடப்பக்கம் யாரும் இருந்தால் தனது இரு கால்களுக்கிடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.)


இஷா தொழுகைக்கு முன் தூங்குவது. (அதாவது, மஃரிப் தொழுதபின் தூங்கினால் இஷாவின் நேரம் முடியும் வரை தூக்கத்திலேயே இருந்துவிடுவோம் என்று அஞ்சினால் இஷா தொழுகாமல் தூங்கக் கூடாது.)


மார்க்க விஷயங்களை அல்லது தவிர்க்க முடியாத முக்கியமான விஷயங்களைத் தவிர மற்றவற்றை இஷா தொழுத பின் பேசுவது, அவற்றில் ஈடுபடுவது.


வீட்டில் உள்ளவர்கள் தன்னை முற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு இமாமத் செய்ய தானாக ஒருவர் முந்துவது.


மார்க்க காரணத்தை முன்னிட்டு மக்கள் தன்னை வெறுக்கும்போது இமாமத் செய்ய முந்துவது. அவர்களுக்குஇமாமத் செய்ய முந்துவது.

கருத்துகள்