திருமணத்தில் தடுக்கப்பட்டவை
திருமணம் செய்யாமல் திருமணத்தை தள்ளிப்போடுவது. வாழ்வது,
ஆண்மையை போக்கிக் கொள்வது.
இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது.
ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது.
தனது தந்தையின் மனைவியை அல்லது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவளை மணமுடிப்பது.
இணைவைக்கும் பெண்ணுடன் திருமணம் செய்வது.
இணைவைக்கும் ஆணுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது.
நிபந்தனையுடன், அதாவது நான் என் மகனை அல்லது சகோதரியை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன். அதேபோல் நீ உன் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது.
குறிப்பிட்டக் காலத்திற்கு மட்டும் திருமணம் முடிப்பது.
ஒரு பொறுப்பாளரும் இரு சாட்சிகளுமின்றி திருமணம் முடிப்பது.
பெண், பெண்ணை முன்னின்று மணமுடித்து வைப்பது.
பெண் தானாகவே மணமுடித்துக் கொள்வது.
பெண்ணை அவளது மணமுடித்துக் கொடுப்பது. அனுமதியின்றி
ஒருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது. (அவர் அனுமதியளித்தால் அல்லது அதிலிருந்து விலகி விட்டால் இவ்வாறு செய்வது தவறில்லை.)
கணவன் இறந்து இத்தா இருக்கும் பெண்ணை தெளிவான வார்த்தையைக் கொண்டு (வெளிப் படையாக) திருமணத்தைப் பற்றிப் பேசுவது.
ரஜஈ (ஒன்று அல்லது இரண்டு) தலாக் கொடுக்கப் பட்ட பெண்ணை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண் கேட்பது.
ரஜஈ தலாக் சொன்ன பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றுவது.
ரஜஈ தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா முடியும் முன் கணவனின் வீட்டைவிட்டு வெளியேறி விடுவது. கணவனை விட்டுப் பிரிவது.
தலாக் விடப்பட்ட பெண்ணை அவள் மீது விருப்பமின்றி அவளுக்கு சிரமம் தருவதற் காக இத்தா முடிவதற்கு முன் அவளைத் தடுத்து வைத்துக் கொள்வது.
தலாக் விடப்பட்ட பெண்ணை தவணை காலத்திற்குள் அவளை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணமில்லாமல் அவளிடம் சேர்வது.
தலாக் விடப்பட்ட பெண் தான் கற்பம் தரித்திருப்பதை மறைப்பது.
தலாக்கை விளையாட்டாக பயன்படுத்துவது.
ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு பெண் கேட்கும்போது அவரிடம் முதல் மனைவியை தலாக் சொல்லும்படி அந்தப் பெண் கூறுவது. அதேபோல் இரு மனைவிகளில் ஒருவர் கணவனிடம் மற்றவரை தலாக் சொல்லக் கூறுவது.
கணவனோ மனைவியோ தங்களிடையே உள்ள அந்தரங்க உறவுகளை வெளியே சொல்வது.
மனைவியை கணவன் குழப்புவது, கணவனை மனைவி குழப்புவது.
மனைவி கணவனின் செல்வத்திலிருந்து அனுமதியின்றி செலவு செய்வது.
மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது, பெண்களின் பின்புறத்தில் உறவு கொள்வது.
கணவன் தன்னை அழைக்கும்போது தகுந்த காரணமின்றி மனைவி தவிர்ப்பது.
தீய குணமுடைய பெண் திருந்தியபின் அவளை குத்திக்காட்டி அவளுக்கு வேதனையை அளிப்பது. மன
கணவனின் அனுமதியின்றி அன்னியரை வீட்டிற்குள் அனுமதிப்பது. (கணவனின் பொதுவான அனுமதி போதுமானது. பெண் மார்க்க வரம்பை மீறிவிடக் கூடாது.)
வலிமா விருந்தை தகுந்த மார்க்கக் காரணமின்றி தவிர்ப்பது.
'ஆண் பிள்ளை பெற்று வளமுடன் வாழ்க' என்று வாழ்த்துவது.
ஜிஹாதில் கைது செய்யப்பட்ட அடிமைப் பெண் கர்ப்பம் தரித்தவளாக இருந்தால் அவள் தன் பங்கில் கிடைக்கப் பெற்றவள். அவளிடம் உறவு கொள்வது.
மனைவியிடம் உறவு கொள்ளும்போது அவளது அனுமதியின்றி அஸ்ல் (உறவின் போது இந்திரியத்தை வெளியே விடுவது) செய்வது.
பயணத்திலிருந்து திரும்பும்போது முன் அறிவிப்பின்றி இரவு நேரத்தில் திடீரென்று வீட்டிற்கு செல்வது.
மனைவியின் விருப்பமின்றி முழு மஹரை அல்லது அதில் ஒரு பகுதியை நிர்ப்பந்தமாக திரும்பப் பெறுவது.
மனைவியிடம் நிர்பந்தமாக மஹர் தொகை யைப் பெறுவதற்கு அவளைத் துன்புறுத்தி குலஆ (தலாக்) பெறவைப்பது.
மனைவியை ளிஹார் (தாய்க்கு ஒப்பீடு) செய்வது.
அவ்வாறு ளிஹார் செய்த பெண்ணுடன் அதற்காக கஃபாரா (குற்றப் பரிகாரம்) கொடுப்பதற்கு முன் உறவு கொள்வது.
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளில் ஒருவருக்கு மட்டும் அதிகமான அன்பு காட்டுவது.
தலாக் விடப்பட்டப் பெண்ணை பழைய கணவருக்கு மணமுடித்து கொடுப்பதற்காக ஒருவருக்கு மணமுடிப்பது.
இரு சாட்சிகள் இன்றி மணமுடிப்பது.
கருத்துகள்
கருத்துரையிடுக