நோன்பில் தடுக்கப்பட்டவை
நோன்புப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது.
ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது.
ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்துள்ள மூன்று நாள்களில் நோன்பு நோற்பது.
'யவ்முஷ் ஷக்' என்ற ஷவ்வாலின் 29 பிறையை அடுத்து உள்ள சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பது.
வெள்ளிக் கிழமை மட்டும் அல்லது சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது.
வாழ்க்கை முழுவதும் நோன்பு நோற்பது.
ரமழான் பிறைக்கு முன்புள்ள இரண்டு அல்லது ஒரு நாள் நோன்பு நோற்பது.
ஷஅபான் மாதத்தின் பிந்திய 15 நாள்களில் நோன்பு வைப்பது. (ஆனால் வழக்கமாக பிடிக்கும் நோன்பாக இருப்பின் குற்றமில்லை.)
இஃப்தார் இன்றி (முதல் நோன்பை திறக்காமல்) இரண்டாவது நோன்பு நோற்பது.
ஹஜ்ஜில் உள்ளவர் அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது கூடாது. ஆனால் குர்பானி கொடுக்க முடியாதவர் நோற்கலாம்.
நோன்பில் வாய் கொப்பளிக்கும்போதும் மூக்கை சுத்தம் செய்யும்போதும் அதிகமாக நீரை உள்ளே இழுத்து செய்வது.
கணவன் இருக்கும்போது அவன் அனுமதியின்றி மனைவி நஃபில் நோன்பு வைப்பது.
ஸஹர் நேரத்தில் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்பது.
நோன்பாளி, தன் மனைவியிடம் இச்சையான வார்த்தைகளைப் பேசுவது.
நோன்பாளி பிறரிடம் சண்டை, சச்சரவு செய்வது.
நோன்பு வைத்துக் கொண்டு பொய் பேசுவது.
போர்க்காலத்தில் நோன்பு நோற்பது.
ஹஜ் மற்றும் குர்பானியில் தடுக்கப்பட்டவை
ஹஜ் கடமையான பின்பு தக்க காரணமின்றி அதைப் பிற்படுத்துவது.
ஹஜ்ஜில் இச்சையான வார்த்தைகளை, தீய வார்த்தைகளைப் பேசுவது. தர்க்கம் செய்வது.
இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, சர்வால் (கால்சட்டை) இதுபோன்ற தைக்கப் பட்ட ஆடைகளை அணிவது.
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை மற்றும் கையுறை அணிவது.
இஹ்ராம் அணிந்தவர் புனித மக்கா நகரத்திலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவது, ஒடிப்பது, பிடுங்குவது.
ஹரம் ஷரீஃபில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது. அங்கு வேட்டையாடுவது. அங்குள்ள வேட்டை விரட்டுவது. பிராணிகளை
ஹரமில் கீழே கிடக்கும் பொருள்களை (அறிவிப்புச் செய்து ஒப்படைப்பவரைத் தவிர மற்றவர்) எடுப்பது.
இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்தவரை கஃபனிடும்போடுது அவருக்கு நறுமணம் பூசுவது, அவர் தலையை மறைப்பது.
ஹஜ் செய்த பின்பு விடைபெறும் தவாஃப் (தவாஃபுல் விதா) செய்யாமல் திரும்புவது. (ஆனால், மாதவிடாய், பிரசவ காலம் உள்ள பெண்களுக்கு அனுமதி உண்டு.)
பெருநாள் தொழுகையை தொழுவதற்கு முன்பு குர்பானியை அறுப்பது.
குறையுள்ள பிராணியை குர்பானி கொடுப்பது.
குர்பானி பிராணியின் இறைச்சி அல்லது அதன் உறுப்பில் ஏதாவதொன்றை, உரித்து சுத்தம் செய்தவருக்கு கூலியாக கொடுப்பது
» குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறை பிறந்தபின் முடிவெட்டுவது, நகம் வெட்டுவது. (குர்பானி கொடுத்தபின் இவற்றைச் செய்து கொள்ளலாம்).
கருத்துகள்
கருத்துரையிடுக