உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகள்

 


பயிற்சி பெறுதல்


ஈமானியப் பயிற்சி, சிந்தனைப் பயிற்சி, விழிப்புணர் வுப் பயிற்சி, படிப்படியான பயிற்சி இவையெல்லாம் உ றுதிப்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களாகும்.


ஈமானியப் பயிற்சி


இப்பயிற்சி அல்லாஹ்வைப் பற்றிய பயம், அவனை நேசித்தல், அவனிடத்தில் கூலியை எதிர்பார்த்தல் போன்றவற்றின் மூலம் நம் உள்ளத்திற்கும் மனசாட் சிக்கும் புத்துயிரைக் கொடுக்கும்.





சிந்தனைப் பயிற்சி


இது சரியான ஆதாரத்தின் அடிப்படையில் அமை யக்கூடிய பயிற்சி. ஒரு நிலையற்ற கொள்கை, பிறரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் அடிப்படையில் இருக்காது.


விழிப்புணர்வுப் பயிற்சி


அதாவது குற்றம் புரிவோரின் பாதையில் செல்லா மல் இஸ்லாத்தின் விரோதிகளின் திட்டங்களைப் புரி ந்து, யதார்த்தத்தை நன்கு அறிந்து கொள்ள வே ண்டும். மேலும் நடக்கின்ற சம்பவங்கள், நிகழ்ச்சிக ளின் உண்மை நிலையைச் சூழ்ந்தறிந்து நன்கு எ டைபோட்டுக் கொள்ள வேண்டும்.


படிப்படியான பயிற்சி


தகுந்த முன்னேற்பாடின்மை, அவசரப்படுதல்,கு றுக்கு வழியில் செல்லுதல் ஆகியவை இல்லாமல் சரி யான திட்டத்தோடு இப்பயிற்சி ஒரு முஸ்லிமை படிப் படியாக உயர்வின்பால் கொண்டு செல்கின்றது.


உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகளில் ஒன்றான பயிற்சி பெறுதல் என்ற இவ்வழிமுறையின் முக்கியத்து வத்தைத் தெரிந்து கொள்ள நபி (ஸல் ) அவர்கள் டைய வரலாற்றின் பக்கம் நாம் திரும்ப வேண்டும் மக்காவில் காபிர்களின் துன்பங்களுக்கும் தொல்லை களுக்கும் ஆளான நபித்தோழர்களின் உறுதிக்கு அடிப்படையாக இருந்தது எது? என்று நம்மை நாமேகேட்டுக் கொள்ளவேண்டும். நபியவர்களின் உறுதியா ன பயிற்சி இல்லாமல் அவர்களுக்கு உறுதிப்பாடு கிடைத்திருக்க முடியுமா?


கப்பாப் பின் அரத் (ரலி ) அவர்களை எடுத்துக் கொள்வோம். சத்தியத்தை ஏற்றதற்காக அவர்களுடைய எஜமானர்கள் இரும்புப்பாளங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவர்களை வெற்றுடம்பாக அதில் தூக்கிப்போட்டார்களே! அந்நேரம் அவர்களுடைய மு துகில் உள்ள கொழுப்பு உருகும்போது அந்நெருப் பையே அணைத்துவிட்டது! இவ்வனைத்தையும் தா ங்கிக்கொண்டு அவர்களைப் பொறுமையோடு இருக்க ச் செய்தது எது?


அதுபோல பிலால் (ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி அவர்கள்மீது பெருங்கல்லைத் தூக்கி வைத் தார்கள். சுமையா (ரலி ) அவர்கள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்டார்கள்.


நாம் காணும் இந்தப் பயிற்சி இல்லாதிருந்தால் இத்தோழர்கள் உறுதியாக இருந்திருக்க முடியுமா? எண்ணிப்பார்க்க வேண்டும்.


8-செல்கின்ற பாதையைப் பற்றிய உறுதியான நம்பிக்கை வேண்டும்


ஒரு முஸ்லிமுக்கு தான் செல்கின்ற பாதையைப் பற்றிய உறுதியான நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அப்பாதையில் அவன் மிக உறுதியோடு இருப்பான் எ ன்பதில் சந்தேகமில்லை.

அதுபோல நாம் செல்கின்ற இந்நேரிய பாதை நம க்கு முன்னால் நபிமார்கள், உயிர்த்தியாகம் செய்தவ ர்கள், நல்லோர்கள், உண்மையாளர்கள், மார்க்க அ றிஞர்கள் சென்ற பாதையாகும் என்ற உணர்வும் நம க்கு வரவேண்டும். அப்படியானால் நாம் இப்பாதையி ல் அன்னியர்களாகவோ தனிமைப் படுத்தப்பட்டவர்க ளாகவோ இருக்கமாட்டோம். மாறாக நமக்குத் து ணை கிடைக்கும். நமது கவலை சந்தோஷமாக மா றும். ஏனெனில் அந்த நபிமார்கள், நல்லோர்கள் யா வரும் நம் சகோதரர்களாக இப்பாதையில் இருக்கின் றார்கள் என்ற உணர்வு நமக்கு இருக்கின்றதே!


மேலும் மற்ற மனிதர்கள், ஏனைய படைப்புகளில் அல்லாஹ் நம்மைத் தேர்ந்தெடுத்து நமக்கு சிறப்பை வழங்கியுள்ளான் என்ற உணர்வும் நமக்கு வரவேண் டும். அல்லாஹ் கூறுகிறான்: புகழனைத்தும் அல்லா ஹ்வுக்கே உரியது! அவன் தேர்ந்தெடுத்த அவனு டைய அடியார்கள் மீது சாந்தி உண்டாவதாகடி


(27:54)

கருத்துகள்